இப்பாடலின் நேரடி ஸ்டுடியோ பதிவிற்காக (Live Studio Recording) கெபாவின் எலக்ட்ரிக் மற்றும் அகாஸ்டிக் கிட்டார்களும், தபாஸின் பாரம்பரிய இந்திய ஸ்ட்ரிங்ஸ் வாத்தியங்களும், ஆஷிஷின் புல்லாங்குழல் மற்றும் சாக்ஸபோன் இசையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுடன் ‘தி இந்தியன் கோரல் என்செம்பிள்’ குழுவினரின் பாரம்பரியக் கூட்டுக்குரல் இசையும் இணைந்து பாடலுக்கு ஒரு பிரம்மாண்ட ஒலியமைப்பைத் தந்துள்ளது.
இப்பாடலின் வண்ணமயமான பிரீமியம் மியூசிக் வீடியோவில் சாய் அபயங்கருடன் இணைந்து, திரையின் முன்னணி இளம் நட்சத்திரம் பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். இயக்குநர் தேஜோ பரத்வாஜ் இயக்கத்தில் உருவான இந்த வீடியோவை, மலையாளத் திரையுலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித் தந்து பிரத்யேக கேமரா கோணங்களால் படம்பிடித்துள்ளார். பாடலின் அதிவேக ரிதத்திற்கு ஏற்ப, காட்சிகளின் வண்ண அமைப்புகளும் (Color Palette) இதில் மிக விசித்திரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இப்புதிய பாடலின் நேரடி அறிமுக விழா, சென்னையில் உள்ள புகழ்பெற்ற ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியின் பிரம்மாண்ட மேடையில், 13,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் முன்னிலையில் ஒரு மாபெரும் இசைத் திருவிழாவாக அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.