‘Password’ என்ற தமிழ் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கண்ணன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். ‘Screen movie’ வகையைச் சார்ந்த இந்த திரைப்படம், கதை முழுக்க நாயகனின் செல்போன் திரை வழியே சொல்லபடுகின்ற வித்தியாசமான முயற்சியாக உருவாகி இருக்கிறது. Smartphone addiction என்பதை மையப்படுத்தி இதன் திரைக்கதை அமைந்துள்ளது. அந்த செவ்வக சாதனத்திற்கு ஒருவர் அடிமையாவதன் காரணிகளை அதன் அடிநாதத்திலிருந்து விளக்குபடி உருவாக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பத்தின் பிடியில் சிக்கியிருக்கிறதா மனித இனம்? அல்லது மனிதனின் கோர மனதின் கருவியாகத் தொழில்நுட்பம் மாறியிருக்கிறதா? இந்த இரு கேள்விகளுக்கும் இடையே, விறுவிறுப்பான ஒரு திரைக்கதையாக விரிகிறது இந்தப் படம்!
அரவிந்த் சுந்தர் மற்றும் காவ்யா அனில் முதன்மை காதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘Haamam’ மேகா ராஜன் , ‘கொட்டுக்காளி’ முருகன் கோவிந்தசாமி , ‘Vikkals’ சிபி , பொற்கொடி, சுரேந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜோகன் மற்றும் தினகர் (JD) ஆகியோர் இசை அமைத்து உள்ளனர். திரைக்கதை, ஒளிப்பதிவு , VFX பணிகளை படத்தின் இயக்குனர் கண்ணன் அவர்களே மேற்கொண்டுள்ளார்.
மிகக் குறைந்த நபர்களைக் கொண்டு குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்றாலும் அதன் கதைக்களமும், திரைக்கதையும் பெரும் படங்களுக்கு மத்தியில் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் அதற்கான அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது. 20 நவம்பர் முதல் 28 நவம்பர் வரை நடைபெறும் IFFI Goa திரைப்பட விழாவில் World Premiere ஆக முதன் முதலில் திரையிடப்படுகிறது. அடுத்த வருடம் திரையில் வெளி வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.