இந்தியன் 3 அநேகமாக அடுத்த ஆண்டு திரைக்கு வந்து விடும் என்கிற நம்பிக்கை வந்திருக்கிறது.
உலகநாயகன் கமல் முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள். இந்தியன் இரண்டு எதிர்பார்த்த அளவுக்கு கமர்ஷியல் ஹிட் அடிக்கவில்லை என்கிற சோகம் எல்லாருக்குமே இருக்கிறது. ஆனால் இந்தியன் 3 அப்படி இருக்காது. மிகப்பெரிய ஹிட் அடிக்கும் ,அந்த அளவுக்கு கன்டன்ட் செமயாக இருக்கிறது . பாக்ஸ் ஆபீஸ் சாதனை செய்யும் என்கிறார்கள் . பிறகேன் தாமதம் ?
முதலில் இயக்குநர் ஷங்கர் சைடில் தேக்கம் இருந்தது. தெலுங்கு கேம் சேஞ்சர் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைத் தராததால் இவர் மூட் அவுட் ஆகி இருந்தார். எதிலும் கவனம் செலுத்தாத நிலையில் இருந்ததாக சொன்னார்கள். மிகப்பெரிய அளவில் வேள்பாரியை எடுக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் இந்தியன் 3 ஐ ஒதுக்கி வைத்தார் என்பதாகவே நினைக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வேள்பாரியை உடனடியாக கொண்டு செல்ல முடியாத நிலை. எனவே இந்தியன் 3 ஐ கொண்டு வருகிற முயற்சியில் இறங்கி இருக்கிறார் என்று சொல்கிறார்கள். அதுவும் உண்மைதான்.
இந்தியன் 3 யில் சேனாபதியின் தந்தை வீரசேகர பலராமன் கேரக்டர் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் சேனாபதியின் வேட்டையும் முடிவுறுகிறது என்கிறார்கள். இந்த இரண்டு கேரக்டர்களிலும்உலக நாயகனே நடித்திருப்பது சிறப்புடன் இருக்கிறது . dupping வேலையும் முடிந்திருக்கிறது. இருந்தாலும் சில இடங்களில் கமல் பேச வேண்டியது இருக்கும் என்கிறார்கள்.
அவரது தேதிக்காக காத்திருப்பதாக சேதிகள் வருகின்றன.