விஜய் ஆண்டனி நடிப்பில், அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கும் “திமிரு புடிச்சவன்” வழக்கதிலிருந்து முற்றிலும் மாறுப் பட்டு இருக்கும் என கூறப் படுகிறது. இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் இனிதே நடந்தது.
“
கதாநாயகியாக நிவேதா பெத்தராஜ் நடிக்கிறார்.
” ஒரு பெண் போலீஸ் கதாபாத்திரத்துக்கு நிவேதா பொருத்தமாக இருக்கும் என்று தோன்றவே அவரை அணுகினோம். ஒரு காவல் அதிகாரியின் மிடுக்கு அவருக்கு நன்றாகவே பொருந்தியது. இந்த படத்தில் அவர் மோட்டார் சைக்கிள் ஓட்ட வேண்டிய காட்சிகள் ஏராளம் உள்ளன, அதற்காகவே அவர் பிரத்தியேகமாக பயிற்சி மேற்கொண்டார்” என்று கூறினார் இயக்குனர் கணேஷா. விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்
சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கும் “திமிர் புடிச்சவன்” மார்ச் 1ஆம் தேதி துவங்க உள்ளது. தற்போது இசை கோர்ப்பு பணிகள் துவங்கி உள்ளது.