பரதம் முதல் பாலே வரை ஆடுகிறவர் வரலட்சுமி சரத்குமார்.சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பேசக்கூடியவர். ஷார்ட் ஹான்ட்டுக்கும் அடங்காத வேகம்.அப்பாவைப் போலவே நடிப்புத் தாகம். இவரை கதை நாயகியாக ‘வெல்வெட் நகரம்’ என்கிற படத்தில் ரிப்போர்ட்டராக அறிமுகம் செய்கிறார்கள்.நிஜமாகவே இவர் நிருபராக இருந்து மோடியை இன்டர்வியூ பண்ணினால் எப்படி இருக்கும்? ச்சும்மா ரீல்தான் !
மதுரையில் நிருபர். கோடைக்கானல் பழங்குடி மக்களுக்கு இழைக்கப்படுகிற அநீதியின் வேர் எங்கு இருக்கிறது என்பதை கண்டறியும் பணி.சென்னைக்கு செல்கிற வரலட்சுமி எத்தகைய இடையூறுகளை சந்திக்கிறார் என்பதை விரிவாக அழுத்தமுடன் சொல்லப்போகிறார் இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன்.
மாளவிகா சுந்தர்,ரமேஷ் திலக்,அர்ஜெய்,பிரகாஷ் ராகவன்,இன்னும் பலர் இருக்கிறார்கள். ஒளிப்பதிவு பகத்குமார் ,இசை அச்சு ராஜாமணி. எடிட்டிங் ரேமான்ட் டெரிக்.