சாமி.2 படம் .பாபி சிம்ஹா மறுத்தது எதனால்?

இயக்குநர் ஹரி படம் என்றால் அது நிச்சயம் தப்பு பண்ணாது என்பது  இண்டஸ்ட்ரியின் நம்பிக்கை. சூர்யாவின் தொடர்ச்சியான வெற்றிகளில் ஹரியின் படங்களும் அடங்கும்.

சீயான் விக்ரமின் அடங்காத பெருங்கோபத்துக்கு சரியான தீனி போட்டவன் ஆறுச்சாமிதான்! இந்த ஆறுச்சாமியின்  இரண்டாவது திக் விஜயத்தை தொடங்கி வைத்தால் என்ன ?

திட்டம் போட்டார் ஹரி. இன்று ரிலீசுக்குத் தயார்.

“என் சொந்த ஊர். அந்த ஊர் மக்களின் நியாயமான போராட்டத்துக்கு கிடைச்ச பரிசு துப்பாக்கிச்சூடு.13 பேர் சாவு! எப்படி ரிலீஸ் பண்ண மனசு வரும் தள்ளிப்போட்டுட்டேன்” என்கிறார் ஹரி.

அட விடுங்க சார். கட்சி ஆரம்பிக்கப்போகிற ரஜினியே காலா படத்தை ரிலீஸ் பண்ணுகிறார். நீங்களும் ஜோதியில் கலந்திடுங்க. அதான் மக்களின் போராட்டத்துக்கு பாதி வெற்றி கிடைச்சிருச்சே!

இந்த படத்தில் இன்னொரு சிறப்பு அம்சம். வில்லனாக பாபி சிம்ஹா.

“ப்ரோ…இந்த மாற்றம் எப்படி?”

“எனது நெருங்கிய நண்பன் விஜய சேதுபதிக்காக கருப்பன் படத்தில் வில்லன் பண்ணினேன். அதற்கு பிறகு அப்படி ஏதும் ஐடியா இல்ல. ஹரி சார் வந்து வில்லனா நடிக்க கேட்டார்,

“சார் அந்த மாதிரி ஐடியா எதுவும் இல்ல சார்’னேன் .

“ஸ்கிரிப்ட்டை படிச்சிட்டு உங்க முடிவை சொல்லுங்க”ன்னார்.

திருப்தியா இருந்தது .ஓகே சொல்லிட்டேன்.அருமையான ரோல்.விக்ரம் சாருடன் முதல்தடவையாக நடிக்கிறேன்.” என்றார் பாபி சிம்ஹா.

மிரட்டுங்க.வல்லவனுக்கு வல்லவனாச்சே!