இசைஞானி இளையராஜாவிற்கு இன்று 75-வது பிறந்தநாள். இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் தமிழ் உள்ளிட்ட மூன்று மொழிகளில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பல திரையுலக பிரபலங்களும் இசைஞானிக்கு தங்களது வாழ்த்துகளை டுவிட்டரில் தெரிவித்ததோடு நேரிலும் தொலைபேசியிலும் வாழ்த்தினர். சாலிகிராமம் பிரசாத் ஸ்டுடியோவில் இன்று காலை முதல் ரசிகர்கள் திரண்டு இளையராஜாவுக்கு வாழ்த்துகளை கூறியதோடு அவருடன் புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர். பட அதிபர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், தயாரிப்பாளரும் நடிகருமான சங்கிலி முருகன், உள்ளிட்ட பலரும் இளையராஜாவிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.முன்னதாக கார்த்திக் ராஜா பவதாரிணி, ஆகியோர் கேக் ஒன்றை இளைய ராஜாவுக்காக கொண்டு வந்தனர் அதை இளையராஜா ரசிகர்கள் முன்னிலையில் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.