“சுற்றித்திரிந்தது அறியாத பருவம், பற்றிக்கொள்ள கிளை கிடைத்தால் சுற்றி வளைத்துக் கொள்வது புத்திசாலித் தனம்.”என வாழ்வது திரை உலகத்தினருக்கு புதிதல்ல.
இது சமந்தாவுக்குப் பொருந்தாதா என்ன?
நடிகர் சித்தார்த் -சமந்தா இருவரும் பெற்றோருடன் ராகு-கேது பரிகார பூஜை நடத்தியதும் இருவரும் காதலித்ததும் உலகம் அறிந்ததுதான். ஆனால் நாகார்ஜுனா அக்கிநேனிக்கு மருமகளாகி விட்டார் சமந்தா.
சித்தார்த்துடனான உறவு பற்றி பூடகமாக கருத்து தெரிவித்து இருக்கிறார் சமந்தா.
“நல்ல வேளை கடவுளுக்கு நன்றி. தொடக்க காலத்தில் இருந்த நட்பு என்னை சாவித்திரியின் நிலைக்கு கொண்டு சென்று விட்டிருக்கலாம் .நல்ல வாழ்க்கையை அடையாளம் காட்டி விட்டார் கடவுள்” என்கிறார் .
ஜெமினி கணேசன் மாதிரி சித்தார்த் காதல் மன்னனா என்ன?அவ்வளவு கெட்டவரா அவரு?