தெலுங்குத் திரை உலகை எத்தனை பாட்டில் பினாயில் ஊற்றி கழுவினாலும் கறை போகாது என்று சொல்லும் அளவுக்கு நடிகை ஸ்ரீ ரெட்டி அசிங்கப்படுத்தி இருக்கிறார். ராணாவின் தம்பியையே தப்பாகச் சொல்லி படமும் வெளியிட்டார். எந்த அளவுக்கும் போகக்கூடியவர் என்கிற பயம் ஆந்திராவில் இருக்கிறது. இவரை கண்டிக்கும் தைரியம் யாருக்கும் இல்லை.
தற்போது தமிழ்த் திரை உலகம் பக்கமும் நச்சுப்பார்வை பாயத் தயாராக இருக்கிறது. “விரைவில் தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறேன்,”என்று சொல்கிற ஸ்ரீ ரெட்டி தன்னை தமிழ்பட டைரக்டர் ஒருவரும் படுக்கைக்கு கூப்பிட்டார்.சீக்கிரம் அந்தாளு பெயரைச்சொல்வேன்” என்கிறார்.
அந்த அசிங்கம் யாரு?