கும்பகோணத்தில் நிஜ ரௌடிகள் சேஸிங்
‘திருநாள்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து கும்பகோணத்தில் நடைபெற்று வருகிறது. சந்து-பொந்து வழியாக ஜீவா ரௌடிகளை துரத்தும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட போது, நிஜமாக இரண்டு ரௌடி கோஷ்டிகளுக்குள் அதே பகுதியில் சண்டை நடக்க, படக்காட்சியோடு நிஜ ரௌடிகளின் சண்டையும் தத்ரூபமாக படமாக்கியுள்ளார்கள்.
ஜீவா – நயன்தாரா
இந்தப்படத்தில் ஜீவா ஜோடியாக ‘ஈ’ படத்திற்குப் பிறகு மீண்டும் நயன்தாரா இணைகிறார். இவர்களுடன் ‘பாண்டியநாடு’ வில்லன் சரத்லோகித்தவா, கருணாஸ், மீனாட்சி, ஜோமல்லூரி, கோபிநாத் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு-மகேஷ் முத்துசாமி; இசை-ஸ்ரீ; சண்டை-சூப்பர் சுப்பராயன்; கலை-வி.சீனு; கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்-பி.எஸ்.ராம்நாத்; தயாரிப்பு-எம்.செந்தில்குமார்./