நடிகர் வருண் தவான் சுய் தாகா படத்தில் பெற்ற அனுபவத்தையும் , தையல் நுட்பத்தையும் வைத்து ஒரு சட்டையை தைத்துள்ளார்.அதனை அவருடைய அப்பாவின் 68 வது பிறந்தநாளுக்கு பரிசாக வழங்கினார்.
ஒரு அருமையான வண்ணமுடைய கோடைகால துணியை தேர்வு செய்து தன் கைத்தறி கலையை பயன்படுத்தி நீண்ட நாளாக நேரம் எடுத்து சிறப்பாக ஒரு சட்டையை தைத்து முடித்தார்.இதனை தன் தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்தார்.
இதை கண்ட டேவிட் மிகவும் பிரமாதமாக இருக்கிறது என மகிழ்ச்சியடைந்தார்.தன் மகன் இப்படி தானாகவே அருமையான சட்டையை தைப்பார் என நினைக்கவில்லை எனவும் ஆச்சர்யத்துடன் தெரிவித்துள்ளார்.