“சிவகார்த்திகேயன் மற்றும் பொன்ராம் ஆகியோருடனான என் முந்தைய படங்களில் இருந்ததை விட இந்தப் படத்துடன் எனக்கு உணர்வு ரீதியான தொடர்பு நிறைய இருக்கிறது. வெறும் காமெடி நடிகராக என் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பாக மட்டும் இல்லாமல் என் உடல் ஆரோக்கியத்தை கவனிக்க வைத்தது.
சிவகார்த்திகேயன் பற்றி அவர் கூறும்போது, “மனம் கொத்தி பறவையில் அவரோடு இணைந்து பணிபுரிந்த நாட்களில், நள்ளிரவு நேரத்தில் ஒரு குழந்தையை போல ஃபோனில் அழைத்து நான் எப்படி நடித்தேன் என கேட்பார். ஆரம்பத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் செய்யும் சேட்டை போல என்னிடம் விளையாடுகிறார் என்று நினைத்தேன். ஆனால், அவர் உண்மையிலேயே என் கருத்தை தொடர்ந்து கேட்டார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் படங்களின் மூலம் மிகப்பெரிய உயரத்தை அடைந்த பிறகும் கூட என் பரிந்துரையை தீவிரமாக கேட்டுக் கொண்டிருந்தார். சீமராஜா படப்பிடிப்பின்போதும், நள்ளிரவில் என்னை அழைத்து என்னுடைய கருத்துகளை கேட்டது என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவரது பணிவு மற்றும் அர்ப்பணிப்பு தான் அவரது வெற்றிக்கு காரணமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.