நோட்டாவுக்கு பலத்த வரவேற்பு, சற்றே எதிர்ப்பு!

நோட்டா படத்துக்காக விஜயவாடாவில் மக்கள் பெருந்திரளாக கூடி விட்டார்கள். ஜிம் பாய்ஸ் வைத்து விஜய்  தேவரகண்டாவை பாதுகாப்புடன் அழைத்துச்சென்றிருக்கிறார்கள். தமிழ்-தெலுங்கு இரு மொழிகளிலும் ‘நோட்டா’வைத்  தயாரித்திருப்பவர் ஞானவேல்ராஜா. 

படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சியை விஜயவாடாவில் பொதுக்கூட்டமாகவே நடத்தி இருக்கிறார். கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை.  தேவரகண்டாவின் தொடர் வெற்றி அங்குள்ள முன்னணி ஹீரோக்களையே  மிரள வைத்திருக்கிறது. கூட்டத்தைப் பார்த்த பேரானந்தமோ என்னவோ படத்தில் இருக்கிற  அரசியலை விட நிஜ அரசியலை வெளுத்து வாங்கி இருக்கிறார்  விஜய் தேவரகண்டா

புதிய தலைநகரான அமராவதியைப் பற்றி பேசியவர் இந்த தலைமுறையிலேயே ஒன்று பட்ட ஆந்திர மாநிலத்தைப் பார்த்து விடலாம்  என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். 

ஆனால் தெலங்கானாவில் உள்ள முன்னாள் தணிக்கைக்குழு உறுப்பினர் ஒருவர் நோட்டாவை தடை செய்ய சொல்லி  மேலிடங்களுக்கு மனுக்களை அனுப்பி இருக்கிறார். ஒரு குறிப்பிட்ட கட்சியை படம் ஆதரிப்பதாக சொல்லி இருக்கிறார்.

நூறு பேரு வாழ்த்து சொன்னா ரெண்டு பேரு எதிர்த்து குரல் கொடுப்பது மாதிரிதான். விடுங்க சார்.!