ரெட் அலர்ட் என்று வானிலை ஆராய்ச்சி மையம் சொன்னது. புயல்,சுனாமி என்றெல்லாம் பயமுறுத்தினார்கள். கடைசியில் ரெட் அலர்ட் அரபிக்கடலைத் தாண்டி சென்றுவிட்டது. இப்ப கேரளமும்,தமிழகமும் தப்பித்து விட்டது.
ஆனால் கோலிவுட்டில் குமுறலும் குத்து வெட்டும் ஆரம்பமாகிவிட்டது என்றே சொல்கிறார்கள்.
சர்( க் )கார் பட விழாவில் இளைய தளபதி விஜய் ஒரு குட்டி கதை சொன்னார்.
உடனே காமடி நடிகர் கருணாகரன் “அந்த கதை தலைவர்களுக்கு மட்டுமா, இல்ல நடிகர்களுக்குமா?” என கேட்டு வைக்க கருணாகரனுக்கு வேட்டு வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
வேட்டு வைப்பதற்கென்றே நேர்ந்து விடப்பட்டதுதானே டுவிட்டர்,பேஸ்புக் தளங்கள்.!
“கருணாகரா,உனக்கு சொந்த ஊர் தமிழ்நாடு இல்ல,தலையிடாதே”என தரக்குறைவாக வார்த்தைகளால் அர்ச்சனை செய்யவே கருணாகரனுக்கு சூடு கிளம்பிவிட்டது.
“சர்கார் என்ன தமிழ் மொழியா?முட்டாள்த்தனமா திரும்பத் திரும்ப அசிங்கப்படாதிங்க.இதற்கு அடுத்து எனது தாய்மொழியில் கேள்வி வந்தால் சரியாக இருக்குமா சர்க்கார் அடிமைகளே?”என கார மிளகாய் வைத்திருக்கிறார்.
இந்த சண்டை எதில் முடியுமோ?