இந்தியா- பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்தாலும் வரலாம். ஆனால் நடிகர்களின் ரசிகர் மன்றங்களுக்கு இடையில் நடக்கும் சண்டையை மட்டும் முடிவுக்கு கொண்டு வரமுடியாது போலிருக்கு.!
இதனால்தான் மன்ற சங்காத்தமே வேண்டாம் என்று தல அஜித் ஒதுங்கிவிட்டார். ஆனாலும் ரசிகர்கள் தன்னிச்சையாக மன்றங்கள் வைத்திருக்கிறார்கள்.
விஜய் தனது மன்றங்களை நற்பணி இயக்கமாக மாற்றிக் கொண்டிருக்கிறார், ஆனாலும் அவர்கள் மின்னல்வேக ஜெட் ஏவுகணைகளாக இருப்பார்கள் போலிருக்கிறது.
சர்க்கார் பட இசை விழாவில் பேசிய இளையதளபதி விஜய் பேசிய கருத்துகளுக்கு தனது கருத்துகளை சொல்லி இருந்தார் காமடி நடிகர் கருணாகரன். அவ்வளவுதான் அவரை கிழி கிழி என கிழித்து விட்டார்கள். அத்துடன் அவருக்கு காலமானார் போஸ்டர் அடித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி விட்டார்கள். இதுதான் உச்ச பட்ச கொடூரம்.
இதனால் போலீசுக்குப் போய் புகார் கொடுத்திருக்கிறார் கருணாகரன். அவர்கள் கேட்ட ஆதரங்களை இரண்டு நாளில் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்.
வெளி நாடு போய்விட்ட இளைய தளபதிக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்குமா?