நயன்தாரா இரட்டைவேடங்களில் நடிக்கும் ஐரா!

இணையத்தில் ‘லட்சுமி’, ‘மா’ குறும்படங்களின் மூலம் இணையதள ரசிகர்களிடையே பிரபலமானவர்இயக்குனர் கே.எம்.சர்ஜுன்

.இவர் ’எச்சரிக்கை: இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில்,
நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கும் ‘ஐரா’ படத்தை இயக்கி வருகிறார்.

இவருடன், கலையரசன், யோகிபாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை‘அறம்’ படத்தைத் தயாரித்த கோட்டபாடி ஜே ராஜேஷ், கேஜேஆர் ஸ்டுடியோஸ் மூலம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.இப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் ஒரு கெட்டப்பில் தன்னுடைய இயல்பான தோற்றத்தில் இருக்கும் நயன்தாரா, மற்றொரு கெட்டப்பில் கறுப்பு நிறத்தில் சோகமாக இருக்கிறார். இது திகில் படம் என்பதால், நயன்தாராவின் மற்றொரு கெட்டப் ‘பேயாக’ இருக்கலாம் என்கிறது நயனின் வட்டாரம்.