‘பேட்ட’ படத்தில் ‘ஜானி’ பட இயக்குனர் !

சூப்பர்ஸ்டார் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிற படம்’ பேட்ட’. இதில்தான் சரக்குக்கு மேல் சரக்குகளை சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

எங்க பேட்ட சரக்குக்கு எந்த சரக்குடா ஈக்குவல் ஆகும் என்கிற மெதப்பு! காச்சுங்க காச்சுங்க.!

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன்,மக்கள் செல்வன்  விஜய்சேதுபதி, திரிஷா, சிம்ரன், சசிகுமார், மேகா ஆகாஷ் என நட்சத்திர பட்டாளமே திரண்டு நடித்து வரும் இப் படத்தின் படப்பிடிப்பு தற்போது காசியில் நடந்து வருகிறது.

சமீபத்தில் இப்படத்தில் ரஜினியின் நண்பராக இயக்குனர் சசிகுமாரும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியது.இந்நிலையில் இப்படத்தில் ‘தெறி’, ‘நிமிர்’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’ ஆகிய படங்களில் நடித்த இயக்குனர் மகேந்திரனும்நடிக்கிறார் என்கிறார்கள்.

பேட்ட சரக்கு கும்முன்னுதான் ஏறும்!