இயக்குநர் அமீருக்கு உள்ளொன்றும் புறமொன்றுமாகப் பேசத்தெரியாது. நினைவாற்றல் மிக்கவர். சற்று கோபக்காரர்.
வடசென்னை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் முதலில் பேசியது அமீர்தான். படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.
ஆரம்பமே சபை சலங்கை கட்டிக்கொண்டது.
“எந்த இயக்குநரை நம்பி நடிக்கப்போறது? வெற்றி மாறன் நடிக்கிறியான்னு கேட்டார். ரவுடியாக நடிக்கிறதுக்கு தயங்கல. முதல் நாள் ஷூட்டிங். ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி இப்படி பெரிய பெரிய ஆட்கள். இவங்களுக்கு மத்தியில் நாம்ப என்னத்த நடிக்கிறது?
ஏற்கனவே ஒரு டைரக்டரை நம்பி நடிக்கப்போயி நம்மள டான்ஸ் ஆட விட்டுட்டார். ஆனா ரெண்டு நாள் கழிச்சு டைரக்டரும் ஹீரோவும் ‘வச்சு செஞ்சிட்டம்ல’ன்னு சொன்னதுதான் சோதனையா போச்சு. ஆனா அப்படி எதுவும் வாடா சென்னைய்ல நடக்கல.
தனுஷ் உடலளவில் பலவீனமானவர் .ஆனா அந்த பலவீனத்தையே பலமாக்கிக்கொண்டு பைட் பண்ணிக்கொண்டு இருப்பவர்,பெரிய நடிகர். ஆனா அந்த பலமான தனுஷையே இந்த படத்தில் ஐஸ்வர்யா “போடா..! வீட்ல பெரிய ஆள் இருந்தா கூட்டிட்டு வா”ன்னு டயலாக் பேசும்.இப்படி திறமைசாலிகள் கூடி இருக்கிற இடத்தில நம்ம நடிப்பு எப்படி எடுபடப் போகுது?”என ஜாலியாகப் பேசினார் அமீர்.