எவ்வளவு கடுமையான சீன்களானாலும் சற்று நேரம் அமைதியாக அமர்ந்து உள்வாங்கி பின்னர் சில டேக்குகளில் ஒ.கே வாங்கி விடுவார்கள். நடிகர்,நடிகையரை தனியே விட்டு விடுவார்கள். அப்படித்தான் ‘சூப்பர் டீலக்ஸ் ‘என்கிற படத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்திருக்கிறார். மிஸ்கின்,சமந்தா ,ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
ரம்யாகிருஷ்ணனுக்கு முன்னதாக அந்த கேரக்டரில் நடிப்பதற்கு நதியாவைத்தான் கேட்டிருக்கிறார்கள். ஆனால் காட்சிகளின் கடுமையைப் பார்த்து விட்டு மறுத்து விட்டார் நதியா,இதன் பின்னரே ரம்யா கிருஷ்ணனை ஒப்பந்தம் செய்தார்கள்.
பாகுபலி சிவகாமியை சர்வசாதாரணமாக நடித்து முடித்த ரம்யாவுக்கு ‘சூப்பர் டீலக்ஸ் ‘சோதனைக் களமாக அமைந்து விட்டது. எண்பத்தி ஏழு டேக்குகள் எடுத்தும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்கு நிறைவைத் தரவில்லை.
“சார் ஒன் மோர் டேக் போகலாம்.சரியா இல்லேன்னா நான் விலகிக்கிறேன்”என்று ரம்யா சொல்ல சற்று இடைவெளி விட்டு எடுத்திருக்கிறார்கள்.
ஓகே!
நீலாம்பரியா கொக்கான்னேன்?