மீ டூ என்கிற வலிமையான ஆயுதம் பாடகி சின்மயி கையில் இருக்கிறது. எந்த தேசத்து ராஜாவாக இருந்தாலும் நொடியில் வீழ்த்தி விடலாம். வைரமுத்துவுக்கும் சின்மயிக்கும் எப்பவோ நடந்த பிரச்னை மீ டூ வினால் கொதி நிலைக்கு சென்று இருக்கிறது.
“பாலியல் வன்முறை நடந்ததா ,வாருங்கள் நீதி மன்றம். என சோதனைக்கு தயாராகி விட்டார்வைரமுத்து, .ஆனால் சின்மயி உண்மை கண்டறியும் சோதனைக்கு வைரமுத்து தயாரா என கேட்டிருக்கிறார். இதைப் போலவே ‘மீ டூ’வழியாக சின்மயி குற்றம் சாட்டுகிற எல்லோருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டுமா?
ஏனென்றால் சின்மயி குற்றம் சாட்டிய கல்யாண் மாஸ்டர் விவகாரம் தவறானது என சொல்லி சின்மயியே விலகிக் கொண்டிருக்கிறார். .
வைரமுத்துவுக்கும் சின்மயிக்கும் இடையில் தொழில் ரீதியாக என்ன பிரச்னையோ…. எனது பாட்டை சின்மயி பாடக்கூடாது என வைரமுத்து தடுத்திருக்கலாம் .அதன் வழியாக சண்டையாக மாறி சரியான நேரத்தில் சின்மயி பயன் படுத்தி இருக்கிறார் என நினைக்கவும் முடியும்?
உண்மை கண்டறியும் சோதனை எந்த அளவுக்கு பலன் தரும் ? இதுதான் சரியான முறை என்றால் லஞ்ச ,ஊழல் வாதிகளிடமும் பயன்படுத்திப் பார்க்கலாமே?