தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவுறுத்தல்படி நவம்பர் 16-ம் தேதி மிடில் பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகிறது .அதில் நடிகர் உதயாவின் ‘ உத்தரவு மகாராஜா’ படமும் ஒன்று. வேறு பெரியபடங்கள் வரவில்லை என சொன்னதின் பேரில் வேறு சில மிடில் பட்ஜெட் படங்களும் அதே தேதியில் வெளி வருகின்றன.
இதை நம்பி உதயாவின் உத்தரவு மகாராஜாவின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை (29.ம் தேதி.) நடந்தது.இளைய திலகம் பிரபு, பாப்டா தனஞ்செயன், ஸ்ரீமன். பிரியங்கா,படத்தின் இயக்குனர் ஹாசிப் குரேசி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
உதயா பேசுகையில் ரத்தக் கண்ணீர்தான் வரவில்லை. உடைந்து போய்விடக்கூடாது என்கிற மனநிலையில் தான் பேசினார்.
“இன்றைய காலகட்டத்தில் எங்களைப் போன்றவர்கள் படம் எடுப்பது மிகவும் கஷ்டம்.எடுத்த படத்தை விநியோகஸ்தர்களைப் பார்க்க வைப்பது அதை விடக் கஷ்டம். 16 ம் தேதி மிடில் பட்ஜெட் படங்களை வெளியிட அனுமதித்தார்கள். ஆனால் தற்போது ‘அடங்க மறு, சீதக்காதி ‘ஆகிய இரு படங்களுக்கு அனுமதி கொடுத்திருப்பதாக கேள்விப்படுகிறேன். இந்த படங்கள் வந்தால் மத்த படங்கள், பாதிக்கப்படாதா? நான் தயாரிப்பாளர் சங்கத்திலும் இருக்கிறேன், நடிகர் சங்கத்திலும் இருக்கிறேன். என்னை பார்க்க வருவார்களா, அண்ணன் விஜயசேதுபதி ,ஜெயம் ரவி ஆகியோரைப் பார்க்கவருவார்களா?
விஜய் சேதுபதி அண்ணன், ஜெயம் ரவி அண்ணன் ஆகியோர் மனம் வைத்தால் நானும் மற்ற மிடில் பட்ஜெட் படங்களும் வாழ முடியும். இதை ஒரு கோரிக்கையாக வைக்கிறேன்” என்றார்.