மகிழ்ச்சியோ. துக்கமோ போகிற இடங்களில் மறக்க முடியாத சில நிகழ்வுகள் நடந்து விடும். அப்படி நடந்த ஒரு நிகழ்வு இது,!
பாரதிராஜாவின் அம்மா இறந்துவிட்டார்.திரை உலகப் பிரமுகர்களால் அந்த குக்கிராமம் நிறைந்து இருக்கிறது. சுமைதாங்கிக் கல் மீது உட்கார்ந்திருக்கிறார் இளையராஜா, அவர் குள்ளம் என்பதால் வசதியாக கால் ஆட்டிக்கொண்டிருந்தார்.
ஒரு குடிகாரன் நிறை போதையுடன் அந்த கல்லையே சுற்றிச்சுற்றி வந்தான்..இம்மாதிரியான நிகழ்வுகளில் சரக்குப் போட்டுக்கொண்டு துக்கத்தை தொலைப்பது ஒரு நடை முறைதான்,!
சுமைதாங்கிக் கல்லை சுற்றி வந்த அந்த’குடிமகன்’ ஒரு கட்டத்தில் கல் அருகில் தள்ளாடியபடியே நின்று விட்டான்.அவனால் அதற்கு மேல் சுற்ற முடியவில்லை.
“உங்க எடத்தை எவனுமே புடிக்க முடியாது” என்பதை குழறியபடியே சொல்கிறான்.
படக்கென இளையராஜா அந்த சுமைதாங்கி கல்லை விட்டு குதித்தார்.
“இப்ப இடம் காலியாகிடுச்சு ..போய் புடிச்சுக்க”என்று அவனிடம் போகிற போக்கில் சொல்லிவிட்டு வேறு இடம் தேடிச்சென்றார்.
அந்த இசைஞானிதான் இன்றும் தூக்க மருந்து.
இந்த நிகழ்வைச் சொன்னவர் இயக்குநர் கரு பழநியப்பன்.