டைரக்டர் ஹரியின் ‘ அடடே ‘ ஜப்தி. தயாரிப்பாளர் அதிர்ச்சி.

 

  படங்களில் மட்டுமல்ல நான் நிஜத்திலும் அதிரடியான ஆளுதான் என்பதை நடத்தி காட்டிவிட்டார் திருநெல்வேலி ஆளு டைரக்டர் ஹரி. 

தயாரிப்பாளர் சிபு தமீம்ஸ் ஆபீசில் புகுந்து ஹரி  ஜப்தி பண்ணி இருக்கிறார்.

பொதுவாக தமிழ்ச்சினிமாவில் டைரக்டர் ஹீரோ, ஹீரோயின் உள்பட முக்கிய ஆட்களின் ஜிஎஸ்டி வரியை தயாரிப்பாளரே சுமப்பது வழக்கம்.

30 கோடி சம்பளம் என்றால் சுளையாக சல்லி குறையாமல் கொடுத்து விடவேண்டும்.அந்த முப்பது கோடிக்கான வரியை தயாரிப்பாளரே சுமக்க வேண்டும்.

சம்பாதிப்பவன்தானே வரியை கட்டவேண்டும் என்கிற நீதிக்கதைகள் எல்லாம் கோடம்பாக்கத்தில் எடுபடாது.

இப்படித்தான் சாமி 2 படத்துக்கான கதையும் நடந்திருக்கிறது. ஹரிக்கு எட்டுக் கோடி சம்பளம். இதற்கான வரியை தயாரிப்பாளர் கட்டினாரோ இல்லையோ,தெரியாது. அதற்கான ரசீதை ஹரியிடம் கொடுக்கவில்லை.

இதனால் கேட்டுப்பார்த்து சலித்துப் போன ஹரி அதிரடியாக அலுவலகம் புகுந்து அங்கிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு போய்விட்டார் என்கிறார்கள். ரசீதை கொடுத்து விட்டு சாமானை எடுத்துக் கொண்டு போகச் சொல்லி விட்டதாக சொல்கிறார்கள். 

directorharisamy2vikram