பானுப்பிரியா வீட்டுவேலைக்கார சிறுமிக்கு பாலியல் தொல்லை!

80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை பானுப்ரியா. ஆந்திராவில் வசித்து வரும்  பானுபிரியா சமீபத்தில்  கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார்.இநநிலையில்,

பானுப்ரியா வீட்டில் வேலைசெய்யும் சிறுமிக்கு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்ட்டுள்ளதாக ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் அந்த சிறுமியின் தாய் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

பானுப்ரியா வீட்டிற்கு வேலைக்கு மாதம் 1௦ ஆயிரம் ரூபாய் சம்பளத்திருக்குஅனுப்ப்பட்ட அவருக்கு ,கடந்த  ஒன்றரை வருடங்களாக சம்பளம்எதுவும்  கொடுக்கப்படவில்லையாம்., மேலும் அச் சிறுமிக்கு  பானுப்ரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

“ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் திரைப்பட நடிகை பானுப்பிரியாவின் வேலைக்கார சிறுமி 14 வயது சந்தியாவின் தாய் பிரபாவதி  பானுப்பிரியா மீது புகார் அளித்தார்..அப்புகாரில்,பொருளாதார ரீதியா மிகவும் கீழ் நிலையில் இருக்கும் நான் என்னுடைய மகள் 14வயது சந்தியாவை திரைப்பட நடிகை பானுப்பிரியா வீட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்தேன். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்து என் மகளை அவர்கள் அழைத்து சென்றனர்.
ஆனால் கடந்த 18 மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை. சமீபத்தில் வேறு ஒருவரின் மொபைல் போன் மூலம் என்னுடன் பேசிய  என் மகள் சந்தியா, பானுப்பிரியாவின் அண்ணன்  கோபாலகிருஷ்ணன் என்பவர் தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும்  துன்புறுத்துகிறார், அடித்து துன்புறுத்துகின்றனர் என்றும் கூறினார்.
இதுபற்றி கேட்பதற்காக 18. 1.2019 பானுப்பிரியா வீட்டிற்கு சென்றேன்.
ஆனால் அங்கிருந்தவர்கள் உன்னால் முடிந்ததை செய்துகொள், எங்களிடம் பணம் உள்ளது, எங்களுக்கு செல்வாக்கும் உள்ளது. உன் மகள் மீது திருட்டுக் குற்றம் சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பி விடுவோம். உன் மகள் வேண்டும் என்றால் 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து கூட்டி கொண்டு போவோம் என்று கூறி என்னை கழுத்தை பிடித்து இருந்து வெளியேற்றி விட்டனர். எனவே, இந்த விஷயத்தில் போலீசார் தலையிட்டு நீதி கிடைக்க உதவ வேண்டும் என்று கூறியிருந்தார் பிரபாவதியின் புகார் மனுவை ஏற்றுக்கொண்ட போலீசார்  பானுப்ரியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர். இந்த நிலையில் சாமர்லகோட்டார் போலீசார் சென்னைக்கு சென்று பானு ப்ரியாவிடம் பிரபாவதியின் புகார் பற்றி விசாரணை நடத்த உள்ளனர்.