பெப்சி அமைப்பின் தலைவர் பதவிக்கு போட்டியிட இயக்குனர் ஆர். கே.செல்வமணிக்காக வேட்புமனுவுடன் இணைத்து வழங்கப்பட்ட தோழமை சங்ககங்களின் பரிந்துரை கடிதங்கள் முறையாக அச் சங்கங்ககளின் செயற்குழு கூடி நிர்வாகிகள் ஒப்புதலோடு வழங்கப்படாமல் தன்னிச்சையாக வழங்கப்பட்டதாக தற்போது புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இந்நிலையில்,
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் யாரையும் பரிந்துரை செய்து கடிதம் அனுப்பவில்லை. ஒரு வேளை அப்படி ஏதாவது வந்திருந்தால் அதை ஏற்கவேண்டாம் என்று தேர்தல் அதிகாரிக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பாக்யராஜ் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது –