ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் படம் தர்பார். படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தர்பார் படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரஜினிகாந்த் யோகிபாபு நடித்த ஒருகாட்சி வீடியோவாக வெளியாகியுள்ளது. இது படப்பிடிப்பு குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.