இந்நிலையில்,இவர்களது பதவிக்காலம் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன்நிறைவடைந்தது.என்றாலும்,நடிகர் சங்க கட்டட பணிகள் நடந்து வருவதால் அதையே காரணம் காட்டி 6 மாத காலத்துக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், 6 மாத கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
அதே சமயம்,கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன்ஆகியோர் , “தேர்தலுக்காக ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து அதன்பின்னர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
விரைவில் நடிகர் சங்கத் தேர்தல் தேதியை ஓய்வுபெற்ற நீதிபதி அறிவிப்பார். தேர்தலுக்கு முன்பாக அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் நூற்றுக்கு நூறு சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளன” என்று தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த ஒய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க நடிகர்சங்க அவசர செயற்குழு ஒப்புதல் அளித்தது.
கூட்டத்தின் முடிவில்,நடிகர் சங்கத்தலைவர் நாசர் கூறியதாவது,நடிகர் சங்கத் தேர்தலை நடத்த ஒய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க நடிகர்சங்க சிறப்பு செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது. நாளை முறைப்படி அவரிடம் நடிகர்சங்க அலுவலகம் ஒப்படைக்கப்படும். நாளை அவர் சங்கத்தின் வரவுசெலவு கணக்குகள் அனைத்தையும் சரிபார்த்து அலுவலக நடவடிக்கைகளை மேற்கொள்வார்அதன் பிறகு அவர் தேர்தல் நடக்கும் தேதியை அறிவிப்பார்.தேர்தல் நடத்த நாங்கள் மூன்று இடங்களை பரிந்துரை செய்வோம்.அதில் ஒரு இடத்தை நீதியரசர் தேர்ந்தெடுத்து அறிவிப்பார்.’நடிகர் சங்க நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வா?என்பது தேர்தல் தேதி அறிவித்த பின்பே தெரியவரும்’தேர்தலில் எங்கள் அணி மீண்டும் களமிறங்குகிறது.எனக்கூறினார்.