இத்திரைப்படத்தை, பல தேசிய விருதுகள் வென்ற குறும்பட இயக்குனர்
சக்திவாசன் எழுதி, இயக்குகிறார்.
நகரத்தில் வாழும் ஒரு துடிப்பான இளைஞன், மனம் போன போக்கில் தன்
வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான். நிரந்தர வேலையில் இல்லாத அவன்,அவ்வப்போது சமயோசிதமாக சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு, அதில்
கிடைக்கும் பணத்தில் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கின்றான்.
ஜாக்பாட் திருட்டுடன், வாழ்க்கையில் செட்டிலாக முடிவு செய்கிறான்.
நாயைக் கடத்தும் நால்வர் தவறுதலாக பேயைக் கடத்திவிடுகின்றனர். பேயை சமாளிக்க முடியாமல் சிக்கித் தவித்து சின்னா பின்னமாவதை நகைச்சுவை கலந்து, ஹாரர் எஃபெக்ட்டில் மிகவும் சுவராஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் படமாக்குகிறார் இயக்குனர்.
நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்ய, என்.ஆர். ரகுநந்தன் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.