எஸ்.பி.ஐ நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டதாக நடிகர் சக முன்னாள் தலைவர் சரத்குமார் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார் .இது அனைவருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், அந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக தொடர்ச்சியாக வந்த விமர்சனங்களால், கடந்த செப்டம்பர் மாதம் 29-ம் தேதியே எஸ்.பி.ஐ. சினிமாஸ் உடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளோம். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அதை அறிவிக்கலாம் என இருந்தேன். ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதற்கான ஆதாரத்தை நடிகர் சங்க தலைவரிடம் வழங்குவேன்” என் வாழ்க்கையில் நான் பல வெற்றி தோல்விகளை பார்த்துவிட்டேன். ஆகையால் இந்த தோல்வி என்னை பாதிக்காது. சங்க உறுப்பினராக தொடர்ந்து செயல்படுவேன். எனக்கு கெளரவ பதவி எதுவும் வழங்கினால் அதை கண்டிப்பாக நான் ஏற்க மாட்டேன். ஒரு சங்க உறுப்பினராக என்னை எப்போது அழைத்து பேசினாலும் என்னால் முடிந்த உதவிகளை நான் செய்வேன். உங்களுடன் தொடர்ந்து நான் பயணிக்க தயாராக உள்ளேன். தேவைப்பட்டால் என்னை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு சரத்குமார் கூறினார்.