பாலிவுட் கதாநாயகிக்கு 6 மாதம் ஜெயில்.!

மோசடியில் பெரிய மோசடி சக நடிகைய ஏமாத்துறதுதாங்க.

ஆபத்துக்கு கடன் கொடுத்து உதவுனவளுக்கு பட்டை நாமத்தை போட நினைக்கலாமா?

கொய்னா மித்ரா பாலிவுட் ஹீரோயின். இவருக்கு பிரண்ட் பூனம் சேத்தி..பணக்கஷ்டம் யாருக்குத்தான் இல்ல.

அவசரத்துக்கு பூனம் சேத்தியிடம் 22 லட்சம் கைமாத்தா வாங்கி இருக்காங்க கொய்னா.

கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை திருப்பிக் கொடுத்த நடிகை பாலன்ஸ் தொகைக்கு செக் கொடுத்திருக்காங்க,நாலரை லட்சம் பாக்கி. இதுக்கு ஒரு செக்கை கொடுத்திருக்காங்க .

பாங்க்ல பணம் இல்லேன்னு மரியாதையா திரும்பிருச்சு. கேட்டுப்பார்த்தும் பலனில்லை. போடு கேசை!

ஆனா இங்கதான் டிவிஸ்ட்.

என் செக் புக்கை காணோம்னு கொய்னா சொல்ல கோர்ட்டு ஒத்துக்கல. பெரிய கில்லாடியா இருக்கும்போல இந்த நடிகைன்னு வழக்கை இழு இழுன்னு இழுத்து இப்பதான் மாஜிஸ்திரேட் தண்டனை கொடுத்திருக்கார்.

போயிட்டு வா 

 ஜெயிலுக்கு. ஒரு ஆறு மாசம் உள்ள இருந்திட்டு வான்னு இன்னிக்கு தீர்ப்பு எழுதிட்டார்

கொய்னாபணமோசடிபூனம் சேத்தி