பிரபல பாலிவுட் இயக்குநர், தயாரிப்பாளர் கரண் ஜோஹர் அவ்வப்போது அங்குள்ள நடிகர் நடிகைகளுக்கு பார்ட்டி கொடுப்பது வழக்கம். பார்ட்டி என்றால் மது இல்லாமல் இருக்குமா? ஆட்டம், பாட்டம், கூத்து, கும்மாளம் என போகும் தானே!.
உற்சாகத்தின் எல்லையில் திளைத்த பிரபலங்களை அப்படியே செல்போனில் வீடியோவாக எடுத்து தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார் கரண்ஜோஹர் .
இங்கு தான் வினையே. வருண் தவான் ,ஜோயா அக்தருடன் ஜாலியாக பேசிக்கொண்டு இருப்பதும்,அவ்வீடியோவில் வெள்ளை நிற பவுடர் போன்ற ஓன்று சிதறி கிடந்ததும் . போதை மயக்கத்தில் விக்கி கவுசல் மூக்கை (போதை பவுடர் ஆசாமிகள் மூக்கை தேய்ப்பதை போல) தேய்க்கும் காட்சியும், தன் பக்கம் கேமிரா திரும்புவதை பார்த்தவுடன் எதையோ தனக்கு பின்னால் இயக்குனர் அயன் முகர்ஜி மறைக்கும் காட்சியும் பதிவாகியிருந்தது.
விளக்கின் வெளிச்சத்தை பவுடர் என்று நினைக்காதீர்கள். அப்படி ஏதாவது ஒன்றை வீடியோ எடுத்து வெளியிட, நான் ஒன்றும் முட்டாள் இல்லை என்கிறார்.பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகர்,நடிகைகள் பலரும், எம்.எல்.ஏ. மஜிந்தர் சிங் சிர்சா கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆனால்,நெட்டிசன்கள் பலரும் விளக்கின் ஒளிக்கும், பவுடருக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என பதிவிட்டுள்ளனர். கரண்ஜோகர் வீடியோ விவகாரம் தற்போது விஸ்வரூபமெடுக்க தொடங்கியுள்ளது. வீடியோ கீழே!
https://www.instagram.com/p/B0bn6fpnRk-/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again