இளம் வயது மோடி குஜராத் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் டீ கடை வைத்திருந்தார் அல்லவா? அந்த வட்நகர் ரயில் நிலைய டீ கடை இருந்த இடத்தை டூரிஸ்ட் ஸ்பாட் ஆக்க முடிவு செய்திருக்கிறது குஜராத் பா.ஜ.க.அரசு.
இனி பாஜக தொண்டர்களுக்கு அது ஒரு புனித ஸ்தலம்தான்.
நம்ம நாட்டிலேயும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். டீ கடை வைத்திருந்தார் என்று சொல்வார்கள். அது நக்கலுக்காக சொன்னதா,நையாண்டிக்காக சொன்னதா என்பதெல்லாம் தெரியாது.
அதனால் ஓ.பி.எஸ். வைத்திருந்த டீ கடை இடத்தை தேடிப்பிடித்து அதை டூரிஸ்ட் ஸ்பாட் ஆக்கலாம். அரசுக்கு வருமானம் வருவதை தடுக்கக் கூடாது!