ஆதித்ய வர்மா படத்தின் ‘2’ நிமிட காட்சி வெளியானது!

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’தமிழில் ரீமேக் செய்யப்பட்டு, ‘ஆதித்யவர்மா’வாக உருவாகியுள்ளது.

இப்படத்தில் சீயான் விக்ரம் மகன் துருவ்கதாநாயகனாக நடிக்க,அவருக்கு ஜோடியாக பனிடா  சந்து நடிக்கிறார். பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அர்ஜுன் ரெட்டி பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிடம் உதவியாளராக பணியாற்றிய கிரிசய்யா இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய,  ரதான் இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்கு தணிக்கை குழு ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இம்மாத இதில் வெளியாகவுள்ள இப்படத்தின் 2நிமிடக்காட்சி தற்போது படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.