எண்பதுகள் என்பது தமிழ்ச்சினிமாவுடைய பொற்காலத்தின் எஞ்சிய காலம்.
படங்களும் ஓடின.நட்சத்திரங்களும் அடுத்தடுத்தப் படங்களில் தொடர்ந்தார்கள். தனிப்பட்ட நடிகர்களின் ஆதிக்கம் என்பது அவ்வளவு கடுமையாக இருக்கவில்லை.
ஆரோக்கியமாகவே இருந்தது. மசாலாவும் விரும்பப்பட்டது. இது அவ்வப்போது வந்து போகும். சமுதாய கருத்துக்களை சொன்ன படங்களும் வந்தன.கதைத் திருட்டுகள் இல்லையென சொல்ல முடியாது. பிறமொழி படங்களின் மையக்கருத்தை தழுவியதாக இருந்தது.
அக்காலத்திய நடிகர்கள் கொடுத்து வைத்தவர்கள்.அவர்களது நடிப்பு பாராட்டுக் குரியதாக இருந்தது.எண்பது கால நடிகர்கள் எல்லாம் வருடக் கடைசியில் ஒன்று கூடி விருந்துண்டு பேசி மகிழ்கிறார்கள்.இதிலும் பலர் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். பிரதாப் போத்தன்,ரேகா உள்ளிட்ட பலரை இவர்கள் சேர்க்கவில்லை.ஈகோ என்பது எல்லா காலங்களிலுமே இருந்து வருகிறது. இவர்கள் அறிவு ஜீவிகள் என மற்றவர்களை ஒதுக்குகிறார்களோ என்னவோ! சிரஞ்சீவி யின் புதிய வீட்டில் இந்த கொண்டாட்டம் நடந்திருக்கிறது.
நிச்சயம் எண்பதுகளுக்கு பிறகான நடிகர்கள் இன்றைய நடிகர்கள் உள்பட ஒன்று கூடி மகிழ்வதற்கான வாய்ப்பு கண்டிப்பாக இருக்காது.
காரணம் 80 களின் நடிகர்கள் நின்று விளையாடினார்கள். அதற்கு பின் வந்தவர்களின் காலம் குறுகிப் போனது.
அஜித் வந்தால் விஜய் வரமாட்டார் என்கிற ஓர் உதாரணம் போதும்.!