வயாகம்18 ஸ்டுடியோஸ் & பாரலல் மைண்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் படம் “தம்பி”.இப்படத்தை இயக்கிவரும் ஜீத்து ஜோசப் கூறியதாவது,‘பாபநாசம்’ மாதிரி இதுவும் ஒரு ஃபேமிலி டிராமா, திரில்லர் கதைதான். நகைச்சுவை, ஆக்ஷன்ஸ் , எமோஷன்ஸ், திரில்லிங் மொமண்ட்ஸ் எல்லாமே இந்த ‘தம்பி’யில் அமைந்துள்ளது.
இதில் ஜோதிகா அக்காவாகவும், தம்பியாக கார்த்தியும் நடித்துள்ளது சிறப்பு மிகுந்ததாக உள்ளது. கார்த்தி சுறுசுறுப்பான இளைஞர் வேடத்தில் நடித்துள்ளார்.இவர்களுக்கு அப்பா அம்மாவாக சத்யராஜும் சீதாவும் நடித்துள்ளனர். கார்த்தி ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். இவர்களுடன்,இளவரசு, ஆன்சன் பால், பாலா, சௌகார் ஜானகி, அம்மு அபிராமி, ரமேஷ் திலக் மற்றும் பலர்நடித்துள்ளனர்..
கார்த்தி ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மேட்டுபாளையத்தில் 17 நாட்களும், கோவாவில் 50 நாட்களும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
வருகிற 30ம் தேதி பாடல்கள் வெளியீட்டு விழாநடக்க உள்ளது.
டிசம்பர் 20-ம் தேதி வெளியிடுவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது என்கிறார். இப்படத்தின் வசனத்தை கே.மணிகண்டன் எழுத, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.