குடியுரிமை சட்டத்திருத்தம்; நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்த அமலாபால்!

மத்திய அரசின்  குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் அரசியல் கட்சியினரும் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள்  பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஜாலியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் இந்த போராட்டம் மேலும் பரவிவருகிறது.இந்நிலையில்,குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடத்திய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் நடிகர் சித்தார்த் உட்பட 600 பேர் மீது 2 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில்,நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை  பதிவிட்டுள்ளார். அதில் ஒரு பெண் கையில்  தான் ஒரு இந்தியன் என எழுதப்பட்ட  பதாகையை வைத்திருக்கிறார்.  இந்தியன் என்றால்  இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், ஜெயினவர், புத்திஸ்ட் , சீக்கியர்கள் அனைவரும் அதில் அடக்கம் என்பதை உணர்த்தும் வகையில் வாசகங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. வைரலாக பரவி  வரும் இந்த  துணிச்சலான பதிவை நெட்டிசன்கள்பலரும்  பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதளத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,தனது பெயரை விரிவாக, ‘அல்லா ரக்கா ரஹ்மான்’ என குறிப்பிட்ட விமான டிக்கெட் ஒன்றை பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.