குஷ்பூவை “அங்க” கொண்டுபோய் தான் சேர்க்கணும்!-காயத்ரிரகுராம் ஆவேசம் !!

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. அரசியல் கட்சிகளின் போராட்டங்களும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் நடிகைகளும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு ஆதரவாக கூறியிருந்த ஒரு கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியும், நடிகையுமான குஷ்பூ சுந்தர் தனது டுவிட்டரில், ‘பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா உண்மையிலேயே பித்துப் பிடித்த மனிதர் அவர் மாதிரி யாரும் இங்கே பேச முடியாது பாஜகவில் இருக்கும் யாராவது அவருக்கு புகலிடம் அளிக்க முடியுமா?’ இவ்வாறு குஷ்பூ சுந்தர் ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுஇருந்தார்.
அவரது கருத்துக்கு  நெட்டிசன்கள் மத்தியில் பெரும் ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் குஷ்பூவின் கருத்துக்கு பதிலடியாக, நடன இயக்குனர், நடிகை காயத்ரி ரகுராம், குஷ்புவை கடுமையாக விமர்சித்து தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது,
“கூ….மற்றவர்களின் பெயர்களை மட்டுமே உங்களால அழைக்க முடியும். உங்களின் பொய்களின் பட்டியல் என்னிடம் இருக்கிறது. இந்துக்களை நீங்கள் வெறுக்கிறீர்கள்.பொய் சொல்பவர்களுக்கென்று ஒரு மனநல  மருத்துவமனை கிடையாது.அப்படி இருந்தால் அதில் ஒரு பெரிய கூட்டத்தையும் உங்களையும்,காங்கிரசையும்தான்கொண்டு போய் சேர்க்கணும்” இவ்வாறுஅவர்பதிவிட்டுள்ளார்.காயத்ரிரகுராமின் சர்ச்சைப்பதிவு பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.