அதர்வாவின் “குருதி ஆட்டம்”மீண்டும் தொடங்கியது!

 நடிகர் அதர்வா முரளி  இயக்குநர்  ஆர். கண்ணன்  தாயாரித்து இயக்கும்   இன்னும் தலைப்பிடாத படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம்  அவர் “எட்டு தோட்டாக்கள்”இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் “குருதி ஆட்டம்” படத்திலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் “குருதி ஆட்டம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் அதர்வா முரளி குழந்தை நட்சத்திரம் திவ்யதர்ஷினியை முதுகில் சுமந்து நிற்கிறார்.

வித்தியாசமான இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.இப்படம் குறித்து இயக்குநர் ஶ்ரீகணேஷ் கூறியதாவது…”இப்படத்தின்  கதையின் கரு, இரு கதாப்பாத்திரங்களை மையமாக கொண்டது  “குருதி ஆட்டம்” படம்  ஒரு விபத்திற்கு பிறகு நாயகனுக்கும் ஒரு பெண்குழந்த்தைக்கும் ஏற்படும் உறவை, அவர்களது பயணத்தை கூறுவதாகும். ஆக்‌ஷன் திரில்லர் வகைப்படமாக இப்படம் இருந்தாலும் மிக அழுத்தமான செண்டிமெண்ட் இப்படத்தில் இருக்கும்.

இதனைச் சுற்றியே மொத்த கதையும் அமைக்கப்பட்டிருக்கும் . சில தவிர்க்க முடியாத காரணங்களினால் படப்பிடிப்பு இடையில் தடைபட்டிருந்தாலும் இப்போது அனைத்து தடைகளும் நீங்கி, இம்மாத இறுதியில் மதுரை மாநகரில் இறுதிகட்ட படப்பிடிப்பை நடத்தவுள்ளோம்.  ஒரே கட்டமாக படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கவுள்ளோம் . இப்படத்தில் பிரியா பவாணி சங்கர் நாயகியாக நடிக்க ராதிகா சரத்குமார், ராதாரவி முக்கிய கதாப்பத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருக்கும்”என்கிறார் இயக்குநர் ஶ்ரீகணேஷ்.