ராம்பாபு புரடக்சன்ஸ் படநிறுவனம் தயாரிப்பில் , கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் “முடிஞ்சா இவன புடி”.இப்படத்தின் பிரமாண்டமான கிளைமாக்ஸ் காட்சிகள் ஊட்டி,மற்றும் வேலூர் காட்டுப்பகுதியில் நடந்தது .
,
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என்றாலும் மீதி இரண்டு பாடல்களின் படப்பிடிப்பு அடுத்த மாதம் நடக்கும் என்றும், நாளை முதல் டப்பிங் மற்றும் இதர வேலைகள் தொடங்கும் என்றும் ஏப்ரல் வெளியீடாக இத்திரைப்படம் திரைக்கு வரும் என்கிறது படக்குழு.