சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் ‘கபாலி’ மற்றும்ஷங்கரின் இயக்கத்தில் ‘2.0’ ஆகிய படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்திலும் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பகட்டத்திலும் உள்ளது.
ஷங்கர் இயக்கத்தில்,ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்த படம் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படம் என்பதும் இந்த படத்தில் அக்சய்குமார் வில்லனாக நடிக்கிறார் என்பதாலும் இப்படத்திற்கு இந்தியா முழுவதும்எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.