மே மாதம் 19 ஆம் தேதி ,2017
கேரளத்தில் பரபரப்பான செய்தி.
மைனர் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற சாமியாரின் ஆண் உறுப்பு வெட்டப்பட்டது. சாமியாரை கைது செய்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருக்கிறார் என்பதாக முதல் செய்தி வெளியானது .ஆணுறுப்பை அந்த பெண்ணே வெட்டியதாகவும் சொன்னார்கள்.
இவ்வளவு நாளாக அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. கங்கேஷானந்தா என்கிற அந்த இந்து சாமியார் செல்வாக்கானவர். சிறப்பான சிகிச்சைக்குப் பிறகு வெட்டப்படட நரம்புகள் ,ரத்தக்குழாய்கள் எல்லாம் சீராகி முந்தைய நிலைக்குத் திரும்பி விட்டார் .
வழக்கும் திசை மாறி விட்டது. எந்தப்பெண் தன்னை பாலியல் வன்முறை செய்ததாக சொன்னாரோ அந்தப் பெண்ணே வழக்கினை திரும்பப் பெற்றுள்ளார்.
இந்தப்பெண்ணுக்கு ஆதரவான சிலர் அந்த சாமியாரை தாக்கி ஆணுறுப்பை வெட்டியதாக வழக்கு மாறி இருக்கிறது.சாமியாருக்கு ஆதரவாக இந்து அமைப்புகள் இருக்கின்றன.
இத்தனை வருடங்களாக வழக்கு இழுத்தடிக்கப்பட்டதுக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.
அந்த சாமியார் தன்னை குற்றமற்றவர் என்பதாக சொல்கிறார்.!