மால் தியேட்டர்களுக்கு நல்ல காலம் பிறக்குது….! அக்டொபரில் திறந்து கொள்ளலாமாம்.
ஆலிவுட் ,பாலிவுட் ,மல்டிப்ளெக்ஸ் சங்கிலி தியேட்டர் அதிபர்களுடன் மத்திய அரசு அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு நடத்தியதில் ஒரு முன் வரைவு திட்டம் வகுத்திருக்கிறார்கள்.
இந்திய முழுமையும் இருக்கிற மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களை திறப்பதற்கு அனுமதி.
அவர்கள் முதலில் ஆலிவுட் படங்களையும் ,பின்னர் பாலிவுட் படங்களையும் திரையிடலாம். தற்போது ஆலிவுட்டில் ஜேம்ஸ் பாண்ட் ரக படங்கள் திரையிடத் தயாராக இருக்கின்றன. இதை தொடர்ந்து ஒரு மாதம் சென்ற பின்னர் பாலிவுட் படங்களை திரையிடலாம்.
50 சதவிகித டிக்கெட்டுகளை மட்டுமே விற்பனை செய்திட வேண்டும். முழுமையான கொரானா தடுப்பு எச்சரிக்கைகளை பின்பற்ற வேண்டும்.
குடிதண்ணீர் .தின்பண்ட வகையறாக்களை முதன்மையான கம்பெனிகள் மூலமே விற்பனை செய்யவேண்டும்.
டிக்கெட் கட்டணத்தை எக்காரணம் கொண்டும் உயர்த்தக்கூடாது.
ஆலிவுட் படங்களுக்கு அவ்வளவாக கூட்டம் வருவதில்லை .அதனால் அந்த படங்களுக்கு முன்னுரிமை.
அடுத்து பாலிவுட்டின் டாப் ஹீரோக்களின் படங்கள் உடனடி ரிலீசுக்கு தயாராகவில்லை. சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே தயாராக இருக்கின்றன.
அக்டொபரை அடுத்து சிங்கிள் ஸ்க்ரீன் .நகர்ப்புற தியேட்டர்களை நவம்பரில் திறந்து கொள்ளலாம். தியேட்டர் இருக்கிற ஏரியாக்களில் கொரானா தொற்று இருக்குமேயானால் மாநில அரசுகள் அதற்கு தகுந்தாற்போன்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தசரா .இதர பூஜை விடுமுறைகள் சீராக இருக்குமேயானால் தீபாவளி கொண்டாட்டம்தான்.கிருஸ்துமஸ் ,புத்தாண்டு விழாக்களும் அமர்க்களப்படும். ஆனால் எல்லாமே கடவுளின் அருளாசியில் இருக்கிறது.
மால் தியேட்டர்களை பொறுத்தவரை ஒரே சங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆகையினால் நடப்புத் தயாரிப்பாளர்களின் கைதான் ஓங்கி நிற்கிறது. தியேட்டர் அதிபர்களால் முன்னைப்போல நடந்து கொள்ள முடியாது .
மேலும் மாஸ்டர் படத்தை வாங்கியிருக்கிற விநியோகஸ்தர் நிறுவனம் 30 நாள் மட்டுமே தியேட்டரில் வெளிட்டு விட்டு பிறகு ஓடிடி தளங்களில் ரிலீஸ் பண்ண ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இது தொடர்பான பேச்சு வார்த்தை இன்னும் முடியவில்லை..