இந்த தொகுப்பில் உள்ள 5 குறும்படங்கள் அக்டோபர் 16 ஆம் தேதி 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வெளியாகிறது.
தமிழ் சினிமாவின் பிரபலமான 5 இயக்குனர்களான – சுதா கொங்கரா, கவுதம் மேனன், சுஹாசினி மணி ரத்னம், ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோரை ஒன்றிணைத்து,அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடவுள்ள முதல் ஆந்தாலஜி திரைப்படத்தை 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் அக்டோபர் 16, 2020 முதல் ஸ்டிரீம் செய்ய முடியும்.இந்த தொகுப்பில் உள்ள 5 குறும்படங்கலின் விபரம் வருமாறு,
மிராக்கிள் – கார்த்திக் சுப்புராஜ் (பேட்டை) இயக்கத்தில் பாபி சிம்ஹா (பேட்டை), முத்துக்குமார் (பட்டாஸ்) ஆகியோர் நடிக்கின்றனர்.
அவரும் நானும்/ அவளும் நானும் – கவுதம் வாசுதேவ் மேனன் (என்னை அறிந்தால்) இயக்க த்தில் எம்.எஸ். பாஸ்கர் (சிவாஜி த பாஸ்) மற்றும் ரீத்து வர்மா (பெல்லி சூப்புலு) ஆகியோர் நடிக்கின்றனர்.’
ரீ’யூனியன் – ராஜீவ் மேனன் (கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்) இயக்கத்தில், ஆண்டிரியா (வட சென்னை), லீலா சாம்சன் (ஓகே கண்மணி) மற்றும் சிக்கில் குருச்சரன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இளமை இதோ இதோ – சுதா கொங்கரா இயக்கியுள்ளார். (உத்தம வில்லன்). காளிதாஸ் ஜெயரம் (பூமரம்) மற்றும் ஊர்வசி (சூரரை போற்று), கல்யாணி பிரியதர்ஷன் (ஹீரோ) ஆகியோர் நடித்துள்ளனர்.
காஃபி, எனி ஒன்? – சுஹாசினி மணி ரத்னம் (சிந்து பைரவி) இயக்கி நடிக்க அவருடன் இணைந்து அனு ஹாசன் (இந்திரா), ஸ்ருதி ஹாசன் (ட்ரெட்ஸ்டோன்) ஆகியோர் நடிக்கின்றனர்.