பவர் ஸ்டார் சீனிவாசனின் அலம்பல்!-கொந்தளிப்பில் உடன்பிறப்புகள்!!

பில்டப் நாயகன் பவர்ஸ்டார் சீனிவாசன்.  சந்தானத்துடன் இணைந்து  நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்திற்கு பின்னர் ஓரளவுக்கு பிக்கப் ஆனாலும்,  எதிர் பார்த்த வாய்ப்புகள் அமைய வில்லை .திரையுலகில் அனைவரும் இவரை ஒரு ஜோக்கராகவே தங்களது படங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் ‘அட்ரா மச்சான் விசிலு’ என்ற புதிய படம் தொடங்கப்பட்டுள்ளது.. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் அறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் பவர்ஸ்டார் இருப்பது போன்ற போஸ்டர் தயாரிப்பு தரப்பால் வெளியிடப்பட்டுள்ளது. இது  அதிமுக .தி.மு.க உடன்பிறப்புகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாம். தேர்தல் முடியட்டும் அப்புறம் பாரு!! என கோபத்துக்கு கூர் தீட்டி வருகின்றனராம்.

Comments (0)
Add Comment