கொரோனா வைரஸ் பரவல் குறைய தொடங்கியுள்ளதால் மத்திய அரசு ஒவ்வொரு கட்டங்களாக தளர்வுகள் அறிவித்து வருகிறது.இந்நிலையில்,தற்போது 5-ம் கட்ட தளர்வுகளின்படி பள்ளிகள், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் இன்று முதல் திறக்கப்படுகிறது.புதுச்சேரியில் 5ம் கட்ட ஊரடங்கு தளர்விற்கு பின்னர் புதுச்சேரியில் உள்ள சில திரையரங்குகள் மத்திய அரசு வழிகாட்டுதல் படி இன்று முதல் திறக்கப்படுகிறது. இதனையொட்டி திரையரங்குகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தும், சமூக இடைவெளியுடன் அமர இருக்கைகள் தயார் செய்துள்ளனர். சில திரையரங்குகளில் மக்களை கவரும் வகையில், ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் ரூ.100க்கும்,இதேபோல் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் ரூ.75க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் ஆன்லைன் புக்கிங்கும் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. திரையங்குகளுக்கு வரும் பார்வையாளர்களை மத்திய அரசின் வழிகாட்டு முறைகளை பின்பற்றி அனுமதிக்கபட உள்ளனர். பார்வையாளர்கள் ஒவ்வொருவருக்கும் முககவசம் இலவசமாக வழங்கப்பட உள்ளது.அரசின் அறிவுரையின் படி,தினசரி பகல்11.45, மதியம் 3 மணி, மாலை 6.45 ஆகிய 3 காட்சிகள் மட்டுமே காட்சிகள் திரையிடபட உள்ளது.
இன்று தியேட்டர் திறப்பு: டிக்கெட் கட்டணம் குறைந்தது.!