நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவினர் சேவியர் பிரிட்டோவின் மகள் இயக்குனர் சினேகாவும், அதர்வாவின் தம்பி ஆகாஷும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு சென்னையில் நிச்சயதார்த்தம் நடந்தது.
தொடர்ந்து ,கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்தது.
இந்நிலையில்,நடிகர் அதர்வா கோவாவைச் சேர்ந்த பெண் ஒருவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாகவும் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் சமூகவலைத்தளங்களில் தகவல் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து நடிகர் அதர்வாவின் நட்பு வட்டாரம் கூறுகையில், அதர்வாவும் கோவாவைச் சேர்ந்த பெண் ஒருவரும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வந்தனர்.ஆனால் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் வழங்கிய பின்னரே திருமணம் செய்து கொள்ளலாம் என்று உறுதியாக இருந்து வந்தனர்..
ஆனால், பெண் வீட்டு தரப்பினரின் சம்மதம் தாமதம் ஆனதால், அதர்வா தனது தம்பிக்கு முதலில் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய திருமணம் குறித்து இரு வீட்டாரும் சம்மதித்து விட்டனர் இதையடுத்து,2021-ல் ஜனவரி மாதத்திற்கு மேல் அதர்வாவின் திருமணம் நடைபெறும் என்கிறது அவரின் நட்பு வட்டாரம்.