பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் எவ்வளவு அவசியம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் கண்டிப்பாக தெரிந்தேயாகவேண்டும். தெரிந்திருக்க வேண்டும்.
குறைந்தது ஓராண்டாவது தாய்ப்பால் குடித்தாக வேண்டும்.
ஆனால் நாகரிக மோகம் கொண்ட சில படித்த பெண்கள் தங்களின் மார்பகங்கள் செழுமையை இழந்துவிடும் என்று எண்ணி தாய்ப்பால் கொடுப்பதில்லை. தங்களின் மதர்த்த தோற்றம் மீது கொண்டுள்ள ஆசையை பெற்ற குழந்தையின் மீது காட்டுவதில்லை.
ஆனால் பிரபல பாலிவுட் படத் தயாரிப்பாளர் நிதி பார்மர் ஹிரா நந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் கொடுத்த பின்னரும் அதிக அளவு தாய்ப்பால் சுரந்திருக்கிறது.
இதை வீணாக்காமல் பிரீஸரில் சேமித்து வைக்கமுடியும் ,அது 4 மாதம் வரை கெடாமல் இருக்கும் என்பதை இன்டர்நெட்டில் பிடித்திருந்ததால் அதை முறையாக சேமித்து வைத்திருக்கிறார்.
இந்த கொரானா ஊரடங்கு காலத்தில் தாய்ப்பால் தேவைப்படுகிற குழந்தைகளுக்கு கொடுத்து உதவும் நல்ல எண்ணம்.
ஆனால் அது எந்த அளவு பயன் பட்டது?
பிரீஸரில் 42 லிட்டர் பால் நிறைந்து விட்டதால் தாய்ப்பால் தேவைப்படுகிற குழந்தைகளுக்காக தனது தோழிகளுக்கு கொடுத்திருக்கிறார்.
குழந்தைகளுக்குப் புகட்டுவதற்குப் பதிலாக சிலர் குளிப்பாட்டியிருக்கிறார்கள். சிலர் குழந்தையின் பாதங்களிளில் தேய்த்திருக்கிறார்கள்.
நொந்துபோய் விட்டார் தயாரிப்பாளர் நந்தினி.! ” கொடுமை! வீணாக்கிவிட்டார்கள் !”