நடிகர் பிரபு தேவா ரகசிய திருமணம்?

நடிகர் பிரபு தேவாவிற்கு ஏற்கனவே ரம்லத் என்ற பெண்ணுடன் திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில்,நடிகை நயன் தாராவுடன் ஏற்பட்ட காதல், ரம்லத்துடன் விவாகரத்துக்கு காரணமாக அமைந்தது. இதற்கிடையே நயனின் காதலும் முறிந்து போனது. அதன் பிறகு நயன், விக்னேஷ் சிவனை காதலித்து இருவரும் திருமணம் செய்யாமலே தனிக்குடித்தனம் நடத்தி வருவது வேற கதை. இந்நிலையில், தற்போது 47-வயதாகும் பிரபு தேவா பீகாரைச் சேர்ந்த பிசியோ தெரபிஸ்ட் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் பரவியது.இந்நிலையில், இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு விட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதனை பிரபுதேவா தரப்பு உறுதிப்படுத்தவில்லை