விஜய் சேதுபதி ,டி.ராஜேந்தருடன் கே.வி.ஆனந்த் அமைத்த ‘தெறி’கூட்டணி!!

கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து டி.ராஜேந்தர் நடிக்கும் படத்தின் அறிவிப்புதான் தற்போது சமூக வலைதளங்களில் ‘தெறி’ நியூஸ். ‘அனேகன்’ படத்தைத் தொடரந்து கே.வி.ஆனந்த் இயக்கும் இந்த பெயரிடப்படாத படத்தை ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இரட்டை கதாசிரியர்கள் சுபா இப்படத்திற்கும் திரைக்கதை, வசனம் ஆகிய பணிகளை கவனிக்கவிருக்கிறார்கள். கபிலன் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.சீனு ராமசாமி இயக்கத்தில், ‘தர்மதுரை’ படத்திலும் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment