கருப்பங்காட்டு வலசு படத்தை ‘Crew 21’ Entertainment நிறுவனம் தயாரித்துள்ளது. செல்வேந்திரன் எழுதி இயக்கியிருக்கிறார். நீலிமா இசை,எபிநேசர் தேவராஜ், ஜார்ஜ் விஜய் நெல்சன், ஆரியா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப்படம் எப்படியிருக்கிறது. பார்க்கலாம்.
இன்றைய நவீன யுகத்திலும் கூட எந்தவிதமான வளர்ச்சியுமில்லாமல் இருக்கும் ஒரு மிகச்சிறிய மக்கள் வசிக்கும் பகுதிதான், ‘கருப்பங்காட்டு வலசு’. அதே ஊரில் பிறந்து வளர்ந்த நீலிமா இசை தன்னுடைய ஊருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கிறார். மக்கள் உற்சாகமாகிறார்கள். அதை ஒட்டி ஊர்த் திருவிழாவில் ஆட்டமும், பாட்டமுமாக சந்தோஷமாக இருக்கின்றனர். அதே வேளையில் அன்று இரவு பலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறக்கின்றனர்.
இதை கண்டுபிடிக்கும் பொறுப்பில், காவல் ஆய்வாளரான ஜார்ஜ் விஜய் நெல்சன், ‘கருப்பங்காட்டு வலசு’ ஊருக்குள் வருகிறார். கண்டுபிடித்தாரா? என்ன நடந்தது? என்பதை சொற்பமான வசதிகளை கொண்டு இயக்குனர் செல்வேந்திரன் முடிந்த வரையில் சாமார்த்தியமாகவே திரைக்கதையில் சொல்லியிருக்கிறார்.
படத்தின் முதல் பாதியில் ஏனோதானோவென திரைக்கதை நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் மரணங்கள் எப்படி நடந்தது என்பதையும், அதன் காரணங்களும் தெரிய வரும்போது இயக்குனர் சாமர்த்தியம் தெரிகிறது கடைசி வரையில் மர்மம் நீடிக்கும் திரைக்கதை சபாஷ்!
நீலிமா இசை, காவல் ஆய்வாளராக நடித்திருக்கும் ஜார்ஜ்விஜய், பச்சைக்கிளியாக நடித்திருக்கும் எபிநேசர் தேவராஜ், மல்லி வேடத்தில் நடித்திருக்கும் ஆரியா என அனைவரும் தங்களாலான பங்கை கொடுத்து இருக்கிறார்கள்.
பெருஞ்செலவில் இந்தப்படத்தை தயாரித்திருந்தால் மிகபெரும் கவனம் பெற்ற படமாக அமைந்திருக்கும்